டி டி எப் வாசனை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்..
டி டி எப் வாசனை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்..
சமூக வலைத்தளங்களில் பிரபலமான யூ ட்யுபராக இருப்பவர் டிடிஎஃப் வாசன். இவர் தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டும்போது வீடியோ வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமானவராக இருக்கிறார். இவர் நடிக்கும் முதல் படம் 'மஞ்சள் வீரன்' இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடபட்டது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பூஜை நிகழ்ச்சியில் டிடிஎப் வாசன் கலந்து கொண்ட போது பல்வேறு சர்ச்சையான கேள்விகளை பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது வாக்குவாதம் டி டி எப் வாசனுக்கும் பத்திரிக்கையாளர்களுக்குமிடையில் நடைபெற்றது. இதனை அடுத்து தற்போது ப்ளூ சட்டை மாறன் 'மஞ்சள் வீரன்' திரைப்படத்தை குறித்து பேசி இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் பிரபலமான திரைப்படங்களை விமர்சனம் செய்யும் விமர்சகராக இருப்பவர் ப்ளூ சட்டை மாறன். இவர் டிடிஎஃப் நடிக்கவிருக்கும் 'மஞ்சள் வீரன்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை குறித்து கலாய்த்து பதிவு செய்து இருக்கிறார். அவர் கூறியதாவது, "மஞ்சள் காமலை வந்தவன் மாதிரி இருக்கான். இவன் மஞ்சள் வீரனா, இதையெல்லாம் பாக்கணும் தலையெழுத்து" என்று பதிவிட்டு இருக்கிறார்.