"எருமைகளை ரேப் செய்யும் காட்சிகளை எடுப்பேன்" மிஸ்கின் பேச்சை கண்டிக்காத திரைத்துறையினரை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..
எருமைகளை ரேப் செய்யும் காட்சிகளை எடுப்பேன் மிஸ்கின் பேச்சை கண்டிக்காத திரைத்துறையினரை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..
சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்த "செல்பீ " படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் இயக்குனர் மிஷ்கின் பேசியதை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, அவ்விழாவில் இருந்த ஜிவி பிரகாஷ், வெற்றிமாறன் ஆகியோரை கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த ட்வீட்டில் ப்ளூ சட்டை மாறன், "ஜி வி பிரகாஷ், கெளதம் மேனன் நடித்துள்ள செல்பீ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மிஷ்கின் பேசியது தான் இந்த வீடியோ. விலங்குகளில் கேவலமானது எருமை மாடு. நிறங்களில் மட்டமானது கருப்பு என்ற எண்ணத்தில் மிஷ்கின் இப்படி பேசியுள்ளார்.
இது உலக சினிமா மாமேதை மற்றும் புத்தகப்புலியான மிஷ்கினின் பிற்போக்குத்தனத்தின் உச்சம். ரேப் என்ற வார்த்தையே பொதுத்தளங்களில் தற்போது உபயோகத்தில் இல்லை. ஆனால் இவர் ஏழெட்டு எருமைகளை ரேப் செய்யும் காட்சியை வைப்பேன் என்று மகா மட்டமாக பேசியுள்ளார்.
இந்த அநாகரீக பேச்சிற்கு வெற்றிமாறன், ஜிவி பிரகாஷ் என யாரும் இதுவரை கண்டனம் தெரிவிக்காமல் சிரித்தபடி அமர்ந்திருந்தனர். திரிஷா விஷயத்தில் மன்சூர் அலிகானுக்கு இப்போது வரை கண்டனம் தெரிவித்து வரும் திரையுலக மேதாவிகள் இப்போது மட்டும் மௌனம் காப்பது ஏன்?" என்று பதிவிட்டுள்ளார்.