நிம்மதி இல்லையா.. அதை செஞ்சுட்டு இமயமலைக்கு போயிருங்க.! சூப்பர் ஸ்டாருக்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த ஐடியா!!
நிம்மதி இல்லையா.. அதை செஞ்சுட்டு இமயமலைக்கு போயிருங்க.! சூப்பர் ஸ்டாருக்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த ஐடியா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டார்.
அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் யோகாவின் பலன்கள் குறித்தும்,
இமயமலை குகைகள், அங்கு கிடைக்கும் மூலிகைகள், சித்தர்கள் குறித்து பேசியுள்ளார். தொடர்ந்து அவர் வாழ்க்கையில் பணம், பேர், புகழ் என எல்லா உச்சங்களையும் கடந்து விட்டேன். ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் 10 சதவீதம் கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என கூறியிருந்தார்.
அதற்கு விமர்சகரும், இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், உங்க படத்துல வர்ற மாதிரி எல்லா சொத்தையும் ஏழைகளுக்கு எழுதி வச்சிட்டு... இமயமலையில் நிம்மதியை தேடலாமே ஜி என தெரிவித்துள்ளார். அந்த பதிவு தற்போது பெருமளவில் வைரலான நிலையில் அவரது ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.