வலிமை படத்தின் மொத்த வசூல் இதுதான்! சீக்ரெட்டை உடைத்த தயாரிப்பாளர் போனி கபூர்! எவ்வளவு தெரியுமா??
வலிமை படத்தின் மொத்த வசூல் இதுதான்! சீக்ரெட்டை உடைத்த தயாரிப்பாளர் போனி கபூர்! எவ்வளவு தெரியுமா??
தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் அஜித்குமார் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா, சுசித்ரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வலிமை படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அஜித் ஆக்சன் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ரசிகர்களால் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் கடந்த 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்து கலவையான விமர்சனத்தைப் பெற்றது. ஆனாலும் பல இடங்களில் பெரும் வசூல் சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வலிமை திரைப்படம் ZEE 5 ஓடிடி தளத்தில் வரும் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது வலிமை திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் 200+ கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.