ரஜினிகாந்தின் படத்தை வீடியோ எடுத்த உள்ளூர் மக்கள்... செல்போனை பறித்து கட்டிவைத்த பவுன்சர்கள்..!!
ரஜினிகாந்தின் படத்தை வீடியோ எடுத்த உள்ளூர் மக்கள்... செல்போனை பறித்து கட்டிவைத்த பவுன்சர்கள்..!!
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் ஸலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை லைகா ப்ரொடெக்சன் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்தில் கௌரவ தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.
இந்த படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை பார்க்க பொதுமக்கள் பலரும் திரண்டனர். இவர்கள் செல்போனில் படத்தின் காட்சிகளை வீடியோ எடுத்துள்ளனர்.
இதனால் அங்கிருந்த பவுன்சர்கள் மக்களிடம் இருந்து செல்போனை பறித்ததால் தள்ளுமுள்ளு ஏற்படவே, மக்களை இறுதியாக பவுன்சர்கள் கயிறு கட்டி சிறைபிடித்தனர். இந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.