சன் டீவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு விரைவில் தடை! இதான் காரணமா ?
Case filed against to sun life soppana sundhari show
தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் ஏற்படும் TRP போட்டியால் அணைத்து TV நிறுவனங்களும் மக்களை தங்கள் பக்கம் இழுக்க புது புது நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்துகொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழில் மிகவும் பிரபலமான சன் டிவி நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் உள்ள சன் லைப் என்ற சேனலை புதுமை படுத்தி அதில் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
அந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி. இளைஞர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு இருந்தாலும் நிகழ்ச்சி பயங்கர ஆபாசமாக இருப்பதாக பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்குகிறார். தற்போது சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப தடை விதிக்க வேண்டும் என அனைத்திந்திய சேவைகளுக்கான இயக்கம் சார்பில் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்யா பாபு என்பவர் சன் லைப் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக உள்ளதாக உள்ளது எனவே அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இதுபற்றி கூறிய அவர் இந்த நிகழ்ச்சியை குழந்தைகளுடன் உட்கார்ந்து கண்டிப்பாக பார்க்க முடியாத அளவுக்கு மிக மோசமாக உள்ளதாக கூறியுள்ளார்.