அட.. அவருக்கே ஒரு பாப்பாவா.. சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மி பாப்பாவின் தற்போதைய நிலையை பார்த்தீங்களா.! வைரல் புகைப்படம்!!
அட.. அவருக்கே ஒரு பாப்பாவா.. சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மி பாப்பா இப்போ எப்படி இருக்காங்க பார்த்தீங்களா.!
கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தை பி.வாசு இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு, வினித், மாளவிகா, நாசர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சந்திரமுகி திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. சந்திரமுகி படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை பிரகர்ஷிதா என்பவர் நடித்திருந்தார்.
படத்தில் கொழுகொழுவென க்யூட்டாக இருந்த அந்த குழந்தை ஏற்கனவே வேலன், ராஜராஜேஸ்வரி போன்ற தொடர்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளது. இந்த நிலையில் ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரகர்ஷிதா தற்போது தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.