கெத்துனா அது தலைவர்தான்.. வெளியான சந்திரமுகி படத்தில் இருந்து நீக்கப்பட்ட மாஸ் காட்சி! வீடியோ வைரல்!!
கெத்துனா அது தலைவர்தான்.. வெளியான சந்திரமுகி படத்தில் இருந்து நீக்கப்பட்ட மாஸ் காட்சி! வீடியோ வைரல்!!
தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு, வினித், மாளவிகா, நாசர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சந்திரமுகி திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதல் முறையாக நயன்தாரா நடித்திருப்பார். மேலும் நடிகை ஜோதிகா சந்திரமுகியாக மிரட்டியிருப்பார். மேலும் இதன் வெற்றியைத் தொடர்ந்து படம் பல மொழிகளிலும் ரீமேக் ஆனது.
இந்த நிலையில் தற்போது டெலிட் செய்யப்பட்ட காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ரஜினியின் அறிமுக சண்டையில் நீக்கப்பட்ட காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் ரஜினி செம கெத்தாக மாஸ் காட்டியுள்ளார்.