படம் ஓடுமா என சந்தேகப்பட்ட தயாரிப்பாளர்.! சாதித்துக் காட்டிய ரஜினிகாந்த்.!
படம் ஓடுமா என சந்தேகப்பட்ட தயாரிப்பாளர்.! சாதித்துக் காட்டிய ரஜினிகாந்த்.!
தமிழ் திரையுலகை பொறுத்தவரையில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய நாள் முதல் பல திரைப்படங்களில் வெற்றியை மட்டுமே கொடுத்த ஒரு நடிகராக வரம் வந்தவர். இதன் காரணமாகவே அவருக்கு தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என பட்டம் வழங்கப்பட்டது. இவருடைய திரைப்படமென்றால் திரைப்பட தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, விநியோகஸ்தர்களாக இருந்தாலும் சரி, திரையரங்க உரிமையாளர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் நல்ல லாபம் கிடைக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமுமில்லை. அவர் நடித்த திரைப்படம் தோல்வியடைந்ததாக பெரிய அளவில் யாரும் கேள்விப்பட்டிருக்கவே முடியாது.
இந்த நிலையில் தான் அவருக்கே பிடித்து போய் மிகவும் ரசித்து, கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை அவரே எழுதி நிச்சயமாக வெற்றியடையும் என நினைத்து, உருவாக்கிய திரைப்படம் தான் பாபா. ஆனால் அந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் ரஜினி மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தார்.
முதன்முறையாக ரஜினியின் திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்தது. ஆகவே அந்த நஷ்டத்தை ரஜினியே திருப்பி வழங்கினார். இந்த சம்பவம் அந்த சமயத்தில் ரஜினிக்கு போட்டியாக திரையுலகில் வலம் வந்த பல நடிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. மேலும் அந்தத் திரைப்படத்தின் தோல்வியை ரஜினியின் போட்டி நடிகர்கள் பார்ட்டி வைத்து கொண்டாடிய நிகழ்வும் செய்திகளின் மூலமாக வெளியானது. இந்த சம்பவத்திற்கு பிறகு சுமார் 2 வருடங்கள் ரஜினி வெளியே தலை காட்டாமல் இருந்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. அதன் பின்னர்தான் ரஜினிகாந்த், நடிகர் பிரபுவின் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார்.
இந்த திரைப்பட அறிவிப்பு வெளியானவுடன் இந்த திரைப்படம் ஓடாது ரஜினி இனி அவ்வளவுதான் என்று அனைவரும் பேசத் தொடங்கி விட்டனர். இந்த விவகாரம் ரஜினிக்கு தெரிய வந்ததால், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர்,விழுந்தால் எழுந்திறிக்க முடியாலிருக்க நான் ஒன்னும் யானை இல்ல குதிரை என்று கூறினார். என்னதான் மகிழ்ச்சியுடன் இந்த திரைப்படத்தை எடுக்க தொடங்கியிருந்தாலும், ஒரு கட்டத்தில் இந்த திரைப்படம் ஓடுமா? என இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரான பிரபுவுக்கு சந்தேகம் எழுந்துவிட்டது.
ஆனால் இந்த படம் தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடைந்து இந்த திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் இந்த திரைப்படத்தை பார்த்த ரஜினி, பிரபு உள்ளிட்ட இருவரும் முதல் வாரத்தில் இந்த திரைப்படம் சரியாக வரவேற்பு பெறாது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் நல்ல வரவேற்பை பெறும் என்று தெரிவித்தனர். அதன்படியே அந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை படைத்ததோடு, சற்றேற குறைய 800 நாட்கள் வரையில் திரையரங்கில் ஓடியது.