நடிகர் சார்லிக்கு கிடைத்த உயரிய பட்டம்! குவியும் பாராட்டுகள் - வைரலாகும் புகைப்படம்.
Charli munaivar pittam

தமிழ் சினிமாவில் முதன் முதலில் பொய்கால் குதிரை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் காமெடி நடிகர் சார்லி. அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகருடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
தற்போது இவர் குணசித்திர நடிகராக நடித்து வருகிறார். மேலும் சார்லி படப்பிடிப்பு முடிந்து தனது நேரத்தை வெட்டிய செலவிடாமல் அந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு "தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை" என்ற பெயரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் தற்போது தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் டாக்டர் மற்றும் முனைவர் பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. அதில் நடிகர் சார்லி அவர்களுக்கு தமிழ் திரைப்படங்களின் நகைச்சுவை ஆய்வுக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.