வாவ்.. நம்ம குக் வித் கோமாளி செஃப் தாமுவின் மகள்களா இது! முதன்முதலாக அவரே வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிய ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் ந
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிய ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களான அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், பவித்ரா, ஷகிலா ஆகியோர் இறுதி நிலைக்கு தகுதியாகியுள்ளனர். மேலும் கோமாளிகளாக ஷிவாங்கி, புகழ், மணிமேகலை, பாலா, சரத் ஆகியோர் செய்யும் ரகளைகள் வேற லெவல்.
இவ்வாறு செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாக உள்ளனர். இவர் நன்றாக சமைப்பவர்களை பாராட்டுவது, தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி இவர்களும் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுடன் செய்யும் அட்ராசிட்டிகள் வேற லெவல். நிகழ்ச்சியை கலகலப்பாக்குவர்.
இந்நிலையில் சமூக வலைதளப் பக்கங்களில் தனது அசத்தலான சமையல் வீடியோக்களை வெளியிட்டு வந்த செஃப் தாமு தற்போது முதன்முதலாக தனது மகள்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் செஃப் தாமுவின் மகள்களா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.