வைரமுத்து 13, பாடகர் கார்த்தி 7! தொடரும் பாலியல் வன்கொடுமை லிஸ்ட்! இப்போ இதுதான் முக்கியமா? கொந்தளித்த சின்மயி!
chinamayi talk about sexual harassement
திரைதுறை மட்டுமின்றி அனைத்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் பாடகி சின்மயி. அவர் பாடலாசிரியர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறியதன் மூலம் சர்ச்சைக்குள்ளானார். இந்த மீடூ விவகாரத்தில் சின்மயியை டப்பிங் சங்கத்தின் தலைவராக இருந்த ராதாரவி கடுமையாக விமர்சனம் செய்து,வாக்குவாதங்கள் ஏற்பட்டது. மேலும் சின்மயி சங்க விதிகளை மீறி செயல்பட்டதாகவும், சந்தா செலுத்தவில்லை எனவும் கூறி சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன், நடிகை ஒருவர் தொடர்ந்த பாலியல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் சமூகவலைதளப்பாக்கத்தில் பதிவிட்டிருந்தார்.அதனை தொடர்ந்து இதற்கு சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது 13க்கும் மேற்பட்ட பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமை குறித்து கேள்வி எழுப்பியதால் ராதாரவி போன்ற ஆட்கள் என்னை டப்பிங் யூனியனிலிருந்து வேலைசெய்து வெளியேற்றினர்.
மேலும் பாலிவுட் இசையமைப்பாளர் அனு மாலிக் பொதுஇடத்தில் 6 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாடகர் கார்த்தி, சுவிட்சர்லாந்து பாடகியுடன் சேர்த்து 7 பெண்களிடம் அத்துமீறியுள்ளார். இவர்களின் வரிசையில் கைலாஷ் கெர், ரகு தீக்ஷித் என பலர் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் மற்றுமொரு பதிவில் நம் நாட்டில் மகளிர் தினத்தன்று தான் பெண்களை போற்றுவர். மற்ற நாட்களில் மதிப்பது கூட இல்லை. அப்படிப்பட்ட மனநிலையில் தான் மிருகங்கள் இருக்கின்றன. பாதுகாப்பை உறுதி செய்யாமல் மகளிர் தினம் கொண்டாடி என்ன பயன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.