வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை!. சின்மயி வெளியிட்ட நேரலை வீடியோ!.
வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை!. சின்மயி வெளியிட்ட நேரலை வீடியோ!.
வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என சின்மயி கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பேஸ்புக் நேரலையில் சின்மயி தற்போது பேசியுள்ளார்:
அதில், வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. என் திருமணத்திற்கு தொடர்பாளர்கள் மூலம்தான் வைரமுத்துவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. நேரடி அழைப்பு கொடுக்கவில்லை.
வைரமுத்து தவறாக நடந்துகொண்டார் என கூறுவதற்கு சக பாடகிகள் பலருக்கு தயக்கம் உள்ளது. இந்த நிலையில் #METOO ஹேஸ்டேக் மூலம் தற்போது ஆண்களும் தாங்கள் சந்தித்த பிரச்னைகளை கூற தொடங்கியுள்ளனர்.
பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள்தான் வெட்கப்பட வேண்டும், நான் வெட்கப்பட மாட்டேன் என கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட முகநூல் நேரலை வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.