×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"என்னனு கூட தெரியாத வயசு.." தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை பற்றி பாடகி சின்மயி

chinmayi about sexual harrassment

Advertisement

பாடகி சின்மயி தனது இனிமையான குரலால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் இவரது குரலில் பல பாடல்கள் பெரும் வெற்றியை பெற்றுள்ளன.

இவர் சினிமா துறையில் மட்டுமின்றி பல சமூக நிகழ்வுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர். இவர் சமீப காலமாக குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார். இவளுடைய கருத்துகளை பலரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இவர் தனது குழந்தை பருவத்தில் அவருக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

எனக்கு 8 அல்லது 9 வயது இருக்கும். என்னனு கூட சொல்லத் தெரியாத வயது எனக்கு. அம்மாவுடன் ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒன்றிற்கு சென்றிருந்தேன். நான் அங்கு தூங்கிக் கொண்டிருந்தபோது என்னை யாரோ தொடுவது போல் இருந்தது. அதுகுறித்து அம்மாவிடம் கூறினேன்.

மேலும் எனக்கு பத்து அல்லது பதினோரு வயது இருக்கும்போது டிசம்பர் மாத கச்சேரியை பார்த்துக்கொண்டிருந்தேன். கூட்டத்திலிருந்த ஒரு முதியவர் எனது தொடையை கிள்ளிகொண்டே இருந்தார்.

சமீப காலமாக ஒருவர் என்னுடைய கருத்துக்களுக்கு ஆதரவாக பேசி வந்தார். நானும் அவருக்கு அடிக்கடி நன்றி தெரிவித்து வந்தேன். காலப்போக்கில் அவர் என் கருத்துக்கு ஆதரவு அளித்தது போன்று பாலியல் ரீதியாக என்னிடம் பேச ஆரம்பித்தார். டார்லிங்.. ஸ்வீட் ஹார்ட்.. என்ற வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்த துவங்கினார். இதனால் நான் அவருடன் பேசுவதை தவிர்த்து விட்டேன். இதனால் கோபமடைந்த அவர் எனக்கு எதிராக கடுமையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இவ்வாறு சின்மயி பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#singer chinmayi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story