குழந்தைகளை வைரம், முத்து என கடுப்பேத்திய நெட்டிசன்! கழுவி ஊற்றி பதிலடி கொடுத்த பாடகி சின்மயி!!
குழந்தைகளை வைரம், முத்து என கடுப்பேத்திய நெட்டிசன்! கழுவி ஊற்றி பதிலடி கொடுத்த பாடகி சின்மயி!!
தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்டாகவும் வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சின்மயி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிலையில் தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண் குழந்தை, ஆண் குழந்தை என இரட்டை குழந்தைகளுக்கு சின்மயி தாயாகியுள்ளார்.
இதற்கிடையில் கர்ப்பமாக இருந்த போது சின்மயி ஒரு புகைப்படத்தைக் கூட வெளியிடாத நிலையில் நெட்டிசன்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டாரா?? என கேள்வி எழுப்பினர். அதற்கு சின்மயி மறுப்பு தெரிவித்து தான் கர்ப்பமாக இருந்தது தனது நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரியும் என கூறியிருந்தார். இந்த நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து கூறிவந்தனர்.
சின்மயி இதற்கு முன் ஏற்கனவே கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர், இரு குழந்தைகளையும் வைரம் மற்றும் முத்து போல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கமெண்ட் செய்துள்ளார். இந்நிலையில் கடுப்பான சின்மயி உன்னலாம் பெத்தாங்க பாரு, அவங்கள சொல்லணும் என சாடினார். அதற்கு வாழ்த்தியது ஒரு குத்தமா என அவர் கேட்டிருந்தார்.
மேலும் அவர் வைரம் மற்றும் முத்து என்று சொன்னதை அக்கா வைரமுத்து என்று நினைச்சிட்டாங்க போல எப்போ பாரு அதே நினைப்பு என்று தொடர்ந்து கூற ஆவேசமான சின்மயி அவர போலவே உங்க வீட்ல பிள்ளைகள் பிறக்கட்டும். அவர் நினைப்பாவே இருக்குற உங்களுக்கு என் வாழ்த்துகள் என பதிலடி கொடுத்துள்ளார்.