வைரமுத்து மீது விசாரணை கமிஷன் - முதல்வருக்கு சின்மயி ட்விட்டரில் கடிதம்
Chinmayi requests cm take action against Vairamuthu
பாடகி சின்மயி பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார். இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும் அவரது கணவரும் குடும்பமும் பக்க பலமாக இருந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியவர் சின்மயி. இவர் சமீபகாலமாக தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் மட்டுமல்லாது மற்றவர்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்களையும் "மீடூ" மூலமாக வெளியிட்டு வருகிறார்.
இந்தநிலையில் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் பாடகி சின்மயி தற்போது தமிழ் சினிமாவில் பணியாற்றமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மீ டூ புகார் கூறிய சின்மயி தன்னை வேண்டுமென்றே பழிவாங்கிவிட்டதாக குற்றம் சாட்டி வந்தார்.
இந்நிலையில், ட்விட்டரில் இன்று பாடகி சின்மயி தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், "வைரமுத்துவை விசாரிக்க ஒரு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இதுவரை 8 பெண்கள் அவர் மீது புகார் அளித்துள்ளனர். அவருடைய நடத்தை உலகிற்கே தெரிந்துவிட்டது. தயவு செய்து அவய் மீது நடவடிக்கை எடுங்கள்" என கேட்டுள்ளார்.