கொலையா? தற்கொலையா? நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான உண்மைகள்! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர் பட்டாளமே கொண்டவர் நடிகை சித்ரா. அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாகவும் இருந்தது. ஆனால் இதற்கிடையில் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை ஷூட்டிங்கிற்கு சென்ற இடத்தில் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை. அவரது முகத்திலும் காயம் இருந்ததால் இது கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகமும் பலருக்கும் எழுந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பலரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து இன்று சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகத்தில் உள்ள காயம் வலியால் அவர் கையை உதறும்போது ஏற்பட்ட அவரது நகக்கீறல்கள்தான் எனவும் கூறப்பட்டுள்ளது.