"தனுஷ் கூட என்னை கம்பேர் பண்ணி பேசாதீங்க" கடுப்பான பிரதீப் ரங்கநாதன்..
தனுஷ் கூட என்னை கம்பேர் பண்ணி பேசாதீங்க கடுப்பான பிரதீப் ரங்கநாதன்..
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை மட்டும் இயக்கி வெற்றி பெற்று பிரபலமாக இருப்பவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் அறியப்படுபவர் தான் பிரதீப் ரங்கநாதன்.
இவர் முதன் முதலில் யூட்யூபில் ஷார்ட் பிலிம் இயக்கி பிரபலமானார். இதன் பின்பு ஜெயம் ரவி இயக்கத்தில் 'கோமாளி' எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்து இவருக்கு பாராட்டு பெற்று தந்தது.
மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்த 'லவ் டுடே' திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் மிகப்பெரும் ஹிட்டாகி ரசிகர்கள் கொண்டாடினர்.
இதன்பின் பிரதீப் பிரபல யூ டியூப் சேனலில் பேட்டியளித்தார். அந்த நேரத்தில் பிரதீபிரங்க நாதனின் செயல்கள் தனுஷை போலவே இருப்பதாக ஒப்பிட்டு பேசுகின்றனர் இதற்கு உங்கள் பதில் என்ன பேட்டி என்று தொகுப்பாளர் இவரிடம் கேள்வி கேட்டார். அதற்கு "பிரதீப் ரங்கநாதன் தனுஷுடன் என்னை ஒப்பிட்டு பேசாதீர்கள். அவர் எங்கேயோ இருக்கிறார். நான் இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.