"இந்தப் புகைப்படத்தில் ஸ்டைலாக இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா? இப்போது இவர் ஒரு பிரபல காமெடியன்!"
இந்தப் புகைப்படத்தில் ஸ்டைலாக இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா? இப்போது இவர் ஒரு பிரபல காமெடியன்!
2012ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கிய "கலகலப்பு" படத்தில் ஒரு நகைச்சுவைக் கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார் கருணாகரன். தொடர்ந்து பீட்சா, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, சூது கவ்வும், தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் கருணாகரன் "இன்று நேற்று நாளை" படத்தில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஆனந்த விகடன் சினிமா விருதினை வென்றுள்ளார். மேலும் சிறந்த துணை மற்றும் நகைச்சுவை நடிகருக்கான விருதுகளுக்காக இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஐ டி துறையில் பணிபுரிந்து வந்த கருணாகரன் நளன் இயக்கிய "நாளைய இயக்குனர்" என்ற குறும்படத்தில் தான் முதலில் நடித்தார். இதையடுத்து மேலும் சில குறும்படங்களில் நடித்துள்ள கருணாகரனுக்கு 2013ம் ஆண்டு திருமணம் நடந்து, தற்போது 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
தற்போது வருடத்திற்கு குறைந்தது 6 படங்களிலாவது நடித்துவரும் கருணாகரனின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதில் அவர் மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்தபடி நின்றுள்ளார் அனைவரையும் கவர்ந்துள்ளது.