×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிக்கிட்டாரு போல?.. நடிகர் சூரியின் ஹோட்டலில் வணிகவரித்துறை திடீர் சோதனை.. இதுதான் காரணமா?..!!

சிக்கிட்டாரு போல?.. நடிகர் சூரியின் ஹோட்டலில் வணிகவரித்துறை திடீர் சோதனை.. இதுதான் காரணமா?..!!

Advertisement

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் சூரி. இவர் மதுரையில் அம்மன் உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த உணவகம் மதுரை நகரில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிகுளம் உட்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் வணிகவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த உணவகத்தில் ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகாரளித்த நிலையில், இந்த புகாரின் பேரில் சோதனை நடந்து வருகிறது.

மேலும், உணவகத்துக்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லாதது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. இந்த உணவகத்தின் மீதான புகார் குறித்து 15 நாட்களில் விளக்கமளிக்க வேண்டும் என நடிகர் சூரிக்கு வணிகவரித்துறை உத்தரவு பெற்றுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actor soori #actor soori hotel #commercial tax department #raid #நடிகர் சூரி #tamil cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story