அமலாபாலின் மோசமான ஆபாச காட்சிகளால் சிக்கல்.! தடை செய்யப்படுமா ஆடை?
complain against aadai movie
தமிழ் சினிமாவில் மேயாத மான் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆடை. இப்படத்தில் முக்கிய நாயகியாக அமலா பால் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அமலா பாலுடன் இணைந்து தொகுப்பாளினி ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் அமலாபால் நிர்வாண காட்சிகளில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். இந்நிலையில் ஆடை படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு எதிர்ப்பும் கிளம்பியது.
இந்நிலையில் இதுதொடர்பாக அனைத்து அரசியல் மக்கள் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், நாளை ஆடை திரைப்படம் வெளியாகிறது. அதற்கு A தணிக்கை சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் நிர்வாண காட்சிகளை பயன்படுத்தி படத்தை விளம்பரப்படுத்துவது கலாசார சீரழிவை ஏற்படுத்துகிறது
மேலும் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் எதிராக பாலியல் குற்றங்கள் தற்போது அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய காட்சியில் அமலாபால் நடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படம் தொடர்பான சுவரொட்டிகள், பிற விளம்பரங்களில் ஆபாச காட்சிகள் இடம்பெறுவதை தடை செய்யவேண்டும். அவ்வாறு தடை விதிப்பதற்கு தங்களுக்கு ஏதாவது இடையூறு இருக்குமேயானால் நாங்கள் களத்தில் இறங்கி பெண்கள் பாதுகாப்பிற்காகவும், தமிழ் கலாச்சாரத்தை காப்பதற்காக போராடுவதற்கும் தயாராக உள்ளோம் என கூறப்பட்டுள்ளது.