பெண் குறித்து இழிவான பேச்சு; தமிழா தமிழா-வில் ஆவுடையப்பன் ஆவேசம்.. அரங்கம் அதிர்ந்த கைத்தட்டு.!
பெண் குறித்து இழிவான பேச்சு; தமிழா தமிழா-வில் ஆவுடையப்பன் ஆவேசம்.. அரங்கம் அதிர்ந்த கைத்தட்டு.!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்ற விவாத நிகழ்ச்சி மிகப்பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.
மக்களிடையே விழிப்புணர்வு
மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் முதல், ஒவ்வொரு குடும்பங்களில் நடக்கும் விஷயங்கள் வரை கண்காணித்து, அதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு விவாத நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: முற்றிலும் புதிய கதைக்களம்.! ஜீ தமிழின் பிரபல சீரியலில் மாற்றங்கள்.! அட.. ஹீரோயின் இவரா!!
இந்த வாரத்திற்கான விவாதம்
முன்னதாக கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி, தற்போது ஆவுடையப்பன் சார்பில் முன்னெடுக்கப்படுகிறது. இந்த வாரம் விவாகரத்து ஆனதால் பாதிக்கப்பட்டது ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
கண்டித்து வெளியே அனுப்பிய தொகுப்பாளர்
அப்போது, ஆண்கள் பிரிவில் இருந்த நபர் ஒருவர், பெண் வைத்த குற்றச்சாட்டுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பகிர்ந்தார். இந்த விஷயத்தால் ஆவேசமான தொகுப்பாளர், அவரின் வார்த்தையை கண்டித்து மன்னிப்பு கேட்க கூறினார். அவர் தனது வார்த்தையில் உறுதியாக இருந்ததால், தொகுப்பாளர் அவரை கண்டித்து வெளியே அனுப்பினார். இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: Baakiyalakshmi: "நான் கல்யாணமே பண்ணிருக்ககூடாது" - கலங்கிபோன ராதிகாவுக்கு ஆறுதல் கூறும் பாக்கியா.!