தயாரிப்பாளர் குழுவால் லியோ படத்தை திரையிட மறுக்கும் தியேட்டர் உரிமையாளர்கள்..
தயாரிப்பாளர் குழுவால் லியோ படத்தை திரையிட மறுக்கும் தியேட்டர் உரிமையாளர்கள்..
லோகேஷ் கனகராஜ், இளைய தளபதி விஜய் இணைந்து உருவாகியிருக்கும் திரைப்படம் லியோ. படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டு நாளை வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை தொடர் சர்ச்சைகள் இருந்து வருகின்றன. மேலும் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி விஜயின் வசனத்தால் பல தரப்பில் கண்டனம் வெளியானது.
இந்நிலையில், டிரெய்லர் வெளியிட்ட ரோகிணி திரையரங்கை விஜய் ரசிகர்கள் ஆர்வ கோளாறால் அடித்து நொறுக்கினர். இந்நிலையில் தற்போது 'லியோ' திரைப்படத்தை ரோகிணி திரையரங்கில் திரையிட மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
இதற்கு காரணமாக 'லியோ' திரைப்படத்தின் தயாரிப்பாளர் குழு படத்தை திரையிடுவதற்காக 80% வரை கேட்டுள்ளனர். இதை காரணமாக வைத்தே திரையரங்கம் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் திருச்சியில் மற்றுமொரு திரையரங்கமும் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.