என்னது.. குக் வித் கோமாளி புகழுக்கு இது 2-வது திருமணமா?.. அப்போ ஃபர்ஸ்ட் யாரு?..! நீங்களே பாருங்க..! புகைப்படம் இதோ..!!
என்னது.. குக் வித் கோமாளி புகழுக்கு இது 2-வது திருமணமா?.. அப்போ ஃபர்ஸ்ட் யாரு?..! நீங்களே பாருங்க..! புகைப்படம் இதோ..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் புகழ். இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்தார். இதனால் கடந்த மூன்று சீசன்களிலும் புகழுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகளும் குவிந்தது. "சபாபதி" என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமடைந்தார். அத்துடன் நடிகர் அஜித்தின் வலிமை மற்றும் அஸ்வின் நடிப்பில் வெளியான என்ன சொல்ல போகிறாய் போன்ற படங்களிலும் புகழ் நடித்திருந்தார்.
தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருக்கும் இவர், அருண் விஜயின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் "ஜூ கிப்பர்" என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் புகழ், பென்சி என்பவரை 5 வருடங்களாக காதலித்து வந்தார். இது குறித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது அவர் கூறியிருந்ததை தொடர்ந்து, பலரும் புகழின் திருமணம் குறித்து கேள்விகளை எழுப்பி வந்தனர்.
சில தினங்களுக்கு முன்னதாக அவர்களுக்கு திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து, புகழுக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளரான ராமகிருஷ்ணன் என்பவரின் தலைமையில் புகழ் - பென்சி இருவரும் சுயமரியாதை படி ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவியது.
தற்போது இவர்கள் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் பரவியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் அப்போ இது 2-வது திருமணமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.