×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#வீடியோ : காதல் ரகசியத்தை போட்டு உடைத்த குக்வித் கோமாளி புகழ்...! திருமணம் எப்போது தெரியுமா?

#வீடியோ : காதல் ரகசியத்தை போட்டு உடைத்த குக்வித் கோமாளி புகழ்...! திருமணம் எப்போது தெரியுமா?

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தனது கலாட்ட  நிறைந்த  காமெடி பேச்சால்  ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

அதைத்தொடர்ந்து புகழ் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் புகழின் உச்சிக்கே சென்ற புகழுக்கு  தற்போது ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்துவரும் நிலையில் பயங்கர  பிஸியாக  உள்ளார். மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக்வித் கோமாளி 3 சீசனிலும் கலந்து  கொண்டு தனது  திறமையை  இன்னும் அதிகமாக  மக்களுக்கு வெளிப்படுத்தி வருகிறார். மேலும் காதலியை  பற்றியும் இந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார். காதலியின்  பெயர் பென்சி என்றும், நாங்கள் 5 வருடமாக காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கபோவது யாரு ஆடிஷன் போகும்போதே தெரியும்.மேலும் குக்வித் கோமாளி சீசன் 1, 2 வில் எனக்கு  சப்போர்ட் ஆக  இருந்தாங்க. இந்த வருடத்தில் நாங்கள் திருமணம் செய்ய போவதாகவும்  கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pugal #Introduced #lover
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story