தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீங்கதான் உதவிபண்ணனும்.. எனக்கு வேற யாரு இருக்கா?.. - ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த கூல் சுரேஷ்..! ஏன் தெரியுமா?..!!

நீங்கதான் உதவிபண்ணனும்.. எனக்கு வேற யாரு இருக்கா?.. - ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த கூல் சுரேஷ்..! ஏன் தெரியுமா?..!!

cool suresh emotional video for pathuthala Advertisement

திரைத்துறையில் பெரிய நடிகராகி சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர் கூல்சுரேஷ். இவர் சுரேஷ் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், இவர் நடித்த கதாபாத்திரமான கூல் என்பதை அடைமொழியாக வைத்து இவருக்கு கூல் சுரேஷ் என்று பின் நாட்களில் பெயரானது. 

முதலில் கிடைத்த ரோல்களில் நடித்து வந்த கூல்சுரேஷ் பின் அவரது காமெடி சூப்பர் ஸ்டார் நண்பரான கலாய்களின் நாயகன் சந்தானத்துடன் இணைந்து பல காமெடிகளில் கலக்கியிருக்கிறார். 

Cool Suresh

கடந்த சில வருடங்களாகவே அவருக்கு சரிவர படவாய்ப்பு கிடைக்காத நிலையில், சிம்புவின் ரசிகராக தன்னை அறிவித்துக் கொண்டு அவரது படங்கள் மட்டுமல்லாது தமிழ் மொழியில் வெளியாகும் பல திரைப்படங்களை ப்ரொமோட் செய்யும் வகையில் பல யூடியூப் நிறுவனங்களுக்கு தற்போது பேட்டியளித்து வருகிறார்.

அந்த வகையில் வெந்து தணிந்தது காடு படத்திற்காக ஒரு வசனத்தை வைத்து ப்ரமோட் செய்தார்.  தற்போது பத்துதல படத்திற்காக வசனம் வேண்டும் என்றும், எனக்கு வேற யாரு இருக்கா?.. ரசிகர்களே அதற்கு நீங்கள்தான் உதவவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cool Suresh #Emotional video #pathuthala #Actor simbu #கூல்சுரேஷ்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story