நாட்டையே உலுக்கிய ஆணவ கொலையை, படமாக்க முயற்சி! அதிரடியாக நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
Court ban fliming of pranay honour killing
சமீப காலமாக உண்மை சம்பவங்கள் மற்றும் வரலாற்று படங்கள் எடுப்பது பெருமளவில் அதிகரித்து வருகிறது. இவ்வாறு உண்மை சம்பவங்களை படமாக எடுப்பதில் பிரபலமானவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவர் ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் அவர் நாட்டையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு மர்டர் என்ற படத்தை இயக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
அதாவது தெலுங்கானாவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் பிரணாய் என்பவரை காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமூகத்தை காரணம் காட்டி அந்த பெண்ணின் தந்தை மாருதி ராஜ் கூலிப்படையை ஏவி பொதுவெளியில் பிரணாயை கொடூரமாக வெட்டிக் கொன்றார். இதனை தொடர்ந்து அம்ருதாவின் தந்தை மாருதிராஜ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு மாதங்களுக்கு முன்பு மாருதி ராஜ் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தை மையமாக வைத்தே ராம்கோபால் வர்மா மர்டர் படத்தை இயக்கவிருந்தார். ஆனால் இதற்கு அம்ருதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மேலும் பிரணாயின் தந்தையும் படத்தை தடை செய்யும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இதனை விசாரணை செய்த நீதிபதிகள் இந்த ஆணவ கொலை வழக்கில் தீர்ப்பு வரும்வரை மர்டர் படத்தை எடுக்க கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.