ஆரம்பத்திலையே சொதப்பும் விசுவாசம்! என்ன செய்ய போகிறார் அஜித்! ஆவலுடன் ரசிகர்கள்!
Court ordered to stop visuvasam movie in kovai and erode
இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து விசுவாசம் படத்தில் நடித்துள்ளார் தல அஜித். ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம என மூன்று படங்களுக்கும் கலவையான விமர்சனங்களை பெற்றதை அடுத்து விசுவாசம் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதேபோல சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பேட்ட மற்றும் விசுவாசம் இரண்டு படங்களும் நாளை அதாவது ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது.
தல, தலைவர் ரசிகர்கள் இருவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் விசுவாசம் படத்தை வெளியிட நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளின் விநியோகஸ்தர் சாய்பாபா பெற்று இருந்த கடன் பாக்கி 78 லட்சம் ரூபாயை திருப்பி தராததால் அப்பகுதிகளில் படத்தை வெளியிட தடை கோரி சினிமா பைனான்சியர் உமாபதி வழக்குத் தொடர்ந்தார். இதனால் அந்த பகுதிகளில் விஸ்வாசம் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 96 படத்திற்கு இதுபோன்ற பிரச்னை வந்தபோது தனது சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டு கொடுப்பதாகவும், கடனுக்கு தான் பொறுப்பேற்பதாகவும் விஜய் சேதுபதி கூறினார். தற்போது விசுவாசம் படத்திற்கு அதே நிலைமை வந்துள்ளதால் அஜித் அதுபோன்று கூறுவாரா? படம் வெளியாகுமா என ரசிகரக்ள் ஆவலுடன் உள்ளனர்.