×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

15 வருடங்களுக்குப் பிறகு "ரீ ரிலீஸ்".! கல்ட் கிளாசிக் திரைப்படம்.! ரசிகர்கள் எதிர்பார்ப்பு.!

15 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ்.! கல்ட் கிளாசிக் திரைப்படம்.! ரசிகர்கள் எதிர்பார்ப்பு.!

Advertisement

தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக்  திரைப்படங்களில் சசிகுமார் நடித்த இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படத்திற்கு என்றும் ஒரு  இடம்  உண்டு. 2008 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சசிகுமார் இயக்கி தயாரித்து நடித்த இந்த திரைப்படத்தில்  அவருடன் சமுத்திரக்கனி  ஜெய், சுவாதி, கஞ்சா கருப்பு  உள்ளிட்ட ஒரு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மதுரையை மையமாகக் கொண்ட  இந்த திரைப்படத்தில் இளைஞர்களின் வாழ்க்கை எப்படி அரசியல்வாதிகளாலும் ஜாதியை தலைவர்களாலும் பயன்படுத்தப்படுகிறது என்பதை பரபரப்பான திரைக்கதையோடு சொல்லி இருக்கும் திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரசிகர்களிடம் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

சமீப காலமாகவே சில சூப்பர் ஹிட் திரைப்படங்களை மீண்டும் ரீ ரிலிஸ் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது வருகின்ற ஆகஸ்ட் நான்காம் தேதி சுப்பிரமணியபுரம் திரைப்படம் தமிழகமெங்கும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இது சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Kollywood #subramaniapuram #Re release #cult classic
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story