சந்திரமுகி படத்தில் நடித்த "பொம்மி" பாப்பா இப்போ எப்படி இருகாங்க தெரியுமா?
current photo of santhramuki pommi girl
பி.வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. சூப்பர் ஸ்டார், ஜோதிகா, பிரபு, வடிவேலு, நயன்தாரா, மாளவிகா என தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலர் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சந்திரமுகி. படத்தில் ரஜினி மற்றும் வடிவேலு சேர்ந்து செய்யும் நகைச்சுவை இன்றுவரை பிரபலம். இந்த படம் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி மெஹா ஹிட் ஆனது.
சந்திரமுகி படத்தில் ஒரு பாடலில் ஒரு குழந்தை ‘பொம்மி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்.படத்தில் குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும் மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தது இந்த குழந்தை.
இவரது இயற்பெயர் பிரகர்ஷிதா. இவர் சந்திரமுகி திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு நாடகங்களில் சாமியாகவும் நடித்துள்ளார். தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாக மாறியுள்ள இவர் BSC படித்து வருகிறார். மேலும் திரைப்பட இயக்குனர் ஆவதுதான் இவரது கனவாம்.