டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் அடுத்த அசத்தலான திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ்..
டான்ஸ் மாஸ்டர் சண்டியின் அடுத்த அசத்தலான திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ்..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
இது போன்ற நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படத்தில் சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்து சாண்டியின் நடிப்பு திறமையை பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், சாண்டியின் அடுத்த திரைப்படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சாண்டி அடுத்ததாக கன்னடத்தில் ரோஸி எனும் தலைப்பிடப்பட்ட திரைபடத்தில் நடித்து வருகிறார். படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் சாண்டியை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.