விரைவில் புதிய ஷோ, கெத்தாக களமிறங்கும் டிடி! வெளியான வேறலெவல் வீடியோவால் மிரண்டுபோன ரசிகர்கள்!
dd comparing new show in yenkitta mothadhe
தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினி. இவரது கலகலப்பான பேச்சிற்கும், நடவடிக்கைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் அவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்களையும் சந்தித்து பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து டிடி சமீபத்தில் பவர் பாண்டி, சர்வதாள மயம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் டிடி சில ஆண்டுகளாக விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்தார். பின்னர் கடந்த ஆண்டு எங்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதனைத் தொடர்ந்து பல பெரிய நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கிய டிடி கடந்த ஒரு ஆண்டிற்கு பிறகு தற்போது மீண்டும் விஜய் டிவியில் எங்கிட்ட மோதாதே 2 என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து டிடி மாஸான வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் செய்றோம் ஒரு வருஷத்துக்கு அப்பறம் ஆங்கரிங் செய்றோம். என் அபிமான எங்கிட்ட மோதாதே சீசன்2 சிறப்பான தரமான பன் பண்றோம். அடுத்த ஞாயிறு 6.30 மணிக்கு, இப்ப ஜாலியா புரமோ பாருங்க, பார்த்துட்டு சொல்லுங்க என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.