×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விசுவாசம் படப்பிடிப்பில் திடீர் மரணம்! இக்கட்டான சூழலில் அஜித் செய்த காரியம்!

Dead at vishwasam shooting spot

Advertisement

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் விசுவாசம். வீரம், வேதாளம், விவேகம் என ஏற்கனவே மூன்று முறை சேர்ந்த கூட்டணி தற்போது நான்காவது முறையாக இணைந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் வரும் பொங்கலுக்கு படம் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கபட்டுள்ளது. இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது நடன கலைஞரான சரவணன் என்பவர் திடீரென வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

42 வயதாகும் சரவணன் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர். சரவணனின் மருத்துவ செலவு, உடலை சைதாப்பேட்டை எடுத்து வரும்வரை அனைத்து செலவுகளையும் அஜித் கவனித்திருக்கிறார். இதற்காக 8 லட்சம் வரை செலவு செய்தாராம் தல அஜித். மேலும், சைதாப்பேட்டையில் நடைபெற்ற இறுதிச் சடங்கிலும் பங்கேற்றிருக்கிறார்.இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் அவரது நல்ல குணத்தை கண்டு மிகவும் நெகிழ்ந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vishwasam #Thala ajith
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story