விஜய்யின் பிகில் படத்தில் நடிக்கமறுத்த பிரபல நடிகையின் மகள்.! இதுதான் காரணமா?
Devadharshini daughter missing bigil movie chance
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படத்தில் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்த படத்தில் விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் அக்காவாக நடிகை தேவதர்ஷினி நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்த நிலையில் படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பிகில் படத்தில் கால்பந்தாட்டம் பெண்கள் அணியில் நடிக்கும் வாய்ப்பு நடிகை தேவதர்ஷினியின் மகளுக்கு தேடி வந்தது.ஆனால் அவர் அப்பொழுது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக தயாராகி வந்ததால் அவரை படத்தில் நடிக்கவைக்க மறுத்துள்ளனர். இதுகுறித்து தேவதர்ஷினி பேட்டி ஒன்றிலும் கூறியுள்ளார்.