தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தது இந்த பிரபல நடிகையா? புகைப்படம்!
Devarmagan child artist neelima rani photos
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர், நடிகைகள் ஏராளமானோர் உண்டு. உலக நாயகன் கமலஹாசன் தொடங்கி, அஜித் மனைவி ஷாலினி, ஹன்ஷிகா என பிரபலங்கள் பலரும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவில் பிரபலமானார்கள்.
அந்தவகையில் சிவாஜி கணேசன், கமலஹாசன், நாசர், வடிவேலு ஆகியோர் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தேவர்மகன். தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று சினிமா, சீரியல் என பிரபலமாக இருந்துவருகிறார் நடிகை நீலிமா ராணி.
தேவர் மகன் திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு பேத்தியாக நடித்திருப்பார் நீலிமா. தேவர்மகன் படத்தில் நடித்தபிறகு ஏகப்பட்ட சீரியல்கள், படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் நீலிமா.
இவர் நடித்த முதல் சீரியல் 1998 தெலுங்கில் வெளியான இதி கதா காது என்ற தெலுங்கு சீரியலில் தான். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் 15 கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் சீரியலில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது சன் டிவி, விஜய் தொலைக்காட்சி என முன்னணி தமிழ் தொலைகாட்சி தொடர்களில் நடித்து வருகிறார் நீலிமா.