இட்லி உப்புமா ரகசியம்.! என்னோட பேவரைட் இதுதான்! நடிகை தேவயானி கூறியதை பார்த்தீங்களா!!
இட்லி உப்புமா ரகசியம்.! என்னோட பேவரைட் இதுதான்! நடிகை தேவயானி கூறியதை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த காதல் கோட்டை படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை தேவயானி. அதைத் தொடர்ந்து அவர் விஜய், அஜித், விக்ரம், கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை தேவயானி 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வும் வலம்வந்தார்.
தேவயானி தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர்.
வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்த அவர் சின்னத்திரையிலும் களமிறங்கி ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். அவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்து வருகிறார். தேவயானி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்களில் ஒன்று சூரிய வம்சம். அந்த திரைப்படம் வெளிவந்து 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
சூரிய வம்சம் படத்தில் ஒரு காட்சியில் தேவயானி தனது தந்தைக்கு இட்லி உப்புமா செய்து கொடுப்பார். அந்த சீன் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தேவயானி கூறுகையில், இட்லி உப்புமா இயக்குனர் விக்ரமனோட ஐடியா. அவரோட கான்செப்ட் தான். எனது கணவருக்கும் குழந்தைகளுக்கும் அது ரொம்ப பிடிக்கும் .எனக்கே ரொம்ப ஃபேவரைட்டான டிஸ் உப்புமாதான் என்று கூறியுள்ளார்.