யுவன் ஹெல்ப் பண்ணலன்னா., என் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துருக்கும் - கண்கலங்கிய நடிகர் தனுஷ்..!!
யுவன் ஹெல்ப் பண்ணலன்னா., என் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துருக்கும் - கண்கலங்கிய நடிகர் தனுஷ்..!!
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் "நானே வருவேன்". இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மிரட்டலாக வெளியான நிலையில், யுவனின் வழக்கமான பிஜிஎம்-ஐ காணமுடிகிறது.
11 ஆண்டுகளுக்கு பின் இந்த காம்போ மீண்டும் இணைகிறது. இதற்குமுன் 2018-ஆம் ஆண்டு ரவுடி பேபி பாடல் மூலம் தனுஷும், யுவனும் இணைந்தனர். தனுஷ் தனது அண்ணனில் இயக்கத்தில் முதன் முதலில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமானார்.
இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இப்படம் அதிகம் விமர்சிக்கப்பட்டாலும், பாடல்களுக்காக படம் நன்றாகவே ஓடியது என்றே கூறலாம். இந்தநிலையில், 2011-க்கு பிறகு தனுஷ், செல்வராகவன், யுவன் காம்போ மீண்டும் வந்துள்ளது.
அதன்பின் புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன போன்ற படங்களும் இந்த காம்போவில் வெற்றி படங்களை கொடுத்தது என்று கூறலாம். கடந்த 2018 வெளியான தனுஷ் - யுவன் இணைந்த 'ரவுடி பேபி' பாடலும் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாரி-2 படத்தின் விழாவில் பேசிய தனுஷ், "யுவன் சங்கர் ராஜாவை வெகுவாகப் புகழ்ந்திருந்தார். தன் அண்ணனுடன் தான் யுவன் வருவார். அவரை நான் பிரமிப்பாகவே பார்ப்பேன். யுவன் இப்பவும் எனக்கு ஹீரோ மாதிரி தெரிகிறார்.
அறிமுகமே இல்லாத புதுமுகமாக நான் நடித்த துள்ளுவதோ இளமை படத்திற்கு அற்புதமான இசையமைத்ததால் படம் நன்றாக ஓடியது. அன்று நாங்கள் இருந்த நிலையில், படம் மட்டும் ஓடியிருக்காவிட்டால் நடுத்தெருவுக்கு வந்திருப்போம்.
யுவன் எங்களை காப்பாற்றினார்" என்று கண்கலங்க தனுஷ் கூறினார். தற்போது மீண்டும் யுவன், செல்வராகவன், தனுஷ் இணைந்துள்ளதால் தனுஷ் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.