"அட சூப்பரு..." மிரட்டலான கெட்டப்பில் தனுஷ்... மிரண்டு போன ரசிகர்கள்.!
அட சூப்பரு... மிரட்டலான கெட்டப்பில் தனுஷ்... மிரண்டு போன ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ்.வார்த்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை ராக்கி மற்றும் சாணி காகிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தென்காசியில் உள்ள வனப்பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது சில சர்ச்சைகள் இருந்தாலும் படக்குழுவினர் அனைத்தையும் கடந்து விரைவாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். பீரியாடிக் ஆக்சன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
இந்தத் திரைப்படத்திற்காக தனுஷ் நீண்ட தாடி மற்றும் தலைமுடி வளர்த்திருந்தார். தற்போது இன்னும் அதிகமாக வளர்த்து ஒரு முனிவர் போல காட்சி இருக்கிறார். மும்பை ஏர்போர்ட்டில் இருந்து வெளியான அவரது புகைப்படம் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.
வெளிநாட்டு நடிகர்களைப் போலவே நீண்ட தலை முடி மற்றும் நீண்ட தாடியுடன் கருப்பு நிற கண்ணாடி அணிந்து ஃபுல் கை டி-ஷர்டுடன் தனுஷின் மிரட்டலான லுக் தற்போது இணையதளங்களில் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது.