பல தயாரிப்பாளர்கள் சம்பளமே தருவதில்லை! மேடையில் ஓப்பனாக பேசிய நடிகர் தனுஷ்!
Dhanush speech in asuran audio launch
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், சினேகா ஆகியோர் நாடிவரும் திரைப்படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஏற்கனவே பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளதால் இந்த படமும் மாபெரும் வெற்றிபெறும் என தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்த படத்திற்கு GV பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியிடு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்குவது சாதாரண விஷயம் இல்லை என்றும் பல தயாரிப்பாளர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள். ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார்.
மேலும், இந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு சார் கிட்ட வெற்றிமாறன்தான் இந்த படத்தை இயக்கப்போவதாக கூறியதும் கதையை கூட கேட்காமல் ஓகே சொல்லிவிட்டதாகவும், தனக்கு தரவேண்டிய சம்பள பணம் முழுவதையும் படம் ஷூட்டிங் தொடங்கும் முன்பே அவர் கொடுத்துவிட்டதாகவும் தனுஷ் கூறினார்.