தயவு செய்து அந்த பழக்கத்தை மாத்துங்க..! இதை செய்யுங்க..! உருக்கமான வீடியோ வெளியிட்ட நடிகர் தனுஷ்.!
Dhaunsh video about corono virus
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் நாளை ஒருநாள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு பாரத பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும், மாலை 5 மணிக்கு ஜன்னல் அல்லது வீட்டு வாசலில் நின்று கொரோனவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை பாராட்டும் வகையில் கைகளை தட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மோடியின் இந்த கோரிக்கையை வலியுறுத்து பல்வேறு பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுவரும் வேளையில், நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இளைஞர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் பரவாது என நினைத்து தேவையில்லாமல் ஊர் சுற்றி வருவதாக வெளியான தகவல் மிகவும் வேதனையளிப்பதாகவும், இளைஞர்கள் இந்த வைரஸ் நோயால் அதிகம் இறக்கவில்லை என்றாலும், அந்த நோயை பரப்பும் கருவிகளாக மாறி வருகிறீர்கள், அதனால் தேவையில்லாமல் பொது வெளியில் நடமாடுவதை தவிருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தங்கள் உயிரை பணயம் வைத்து வைரசுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு உறுதுணையாக நிற்போம் என அந்த வீடியோவில் கூறியுள்ளார் தனுஷ்.