MeToo: தொலைக்காட்சி நடிகையிடம் ஆடையை அகற்ற சொன்ன இயக்குனர்; நடிகை செய்தது என்ன தெரியுமா?
director asked to strip down my dress tv actress
MeToo அமைப்பின் மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு பிரபலங்கள் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து, பாலிவுட் நடிகர் நானா படேகர் போன்ற முக்கியமானவர்கள் இதில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பணி புரியும் ஜாஸ்மின் பாஷின் என்ற நடிகை தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் பற்றி பகிர்ந்துள்ளார். இவர் தில் சே தில் தக் என்ற ஹிந்தி நாடகத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர்.
இவர் 5 வருடங்களுக்கு முன்பு ஒரு இயக்குனரால் தனக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை பற்றி இவ்வாறு கூறுகிறார், "குஜராத்தி மற்றும் ஹிந்தி மொழி படங்களில் பிரபலமான அந்த இயக்குனர் தனது அடுத்த படத்திற்கு ஆட்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அந்த தேர்வில் கலந்து கொள்ள நானும் பதிவு செய்தேன்.
அதன்படி ஒருநாள் அந்த இயக்குனரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எங்கள் சந்திப்பின் போது அவருடைய வார்த்தைகள் மிகவும் தவறான நோக்கத்தில் இருந்ததை நான் உணர்ந்து கொண்டேன். அவர் என்னிடம் நீ ஒரு நடிகையாக உருவாவதற்கு என்னவெல்லாம் உன்னால் செய்ய முடியும் என்று கேட்டார். அந்த சமயத்தில் அவர் என்னிடம் எதை பற்றி கேள்வி கேட்கிறார் என்பதை புரிந்து கொள்ளாமல் மிகவும் அப்பாவியாக இருந்த நான் "என் உரையும், என் குடும்பத்தையும் விட்டு விட்டு இங்கு வந்து சினிமாவிற்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதற்கு மேல் நான் என்ன செய்ய வேண்டும்" என்று அவரிடம் கூறினேன்.
பின்னர் அந்த இயக்குனர் எனது ஆடைகளை அவிழ்க்க சொன்னார். "பிகினி உடையில் நீ பார்ப்பதற்கு எப்படி இருக்கிறாய் என்பதை தெரிந்து கொள்ளவே இதை சொல்கிறேன்" என்று அவர் என்னிடம் கூறினார். ஆனால் அந்தப் படத்திற்கும் பிகினி உடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். எனவே அவரிடம் பிகினி உடையில் நடிப்பதற்கான உடல்வாகு என்னிடம் இல்லை என்று கூறி அங்கிருந்து வெளியேறினேன்.
மேலும் அவர் எல்லா பெண்களுக்கும் இதை போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள தைரியம் இருப்பதில்லை. ஒவ்வொரு பெண்களும் இதைப்போன்ற நிலைகளில் எப்படி வேலை செய்வது என்றும் தெரியாத நபர்களை நம்பி எதிலும் இறங்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.