கருப்பு என கலாய்த்தவர்களுக்கு பிகில் இசை வெளியீட்டு விழாவில் தக்க பதிலடி கொடுத்த அட்லீ!
Director atlee speech at pikil audio launch function
தளபதி விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. இயக்குனர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து இந்த படத்தில் நடித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே உருவான தெறி, மெர்சல் போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்றது.
இந்நிலையில் பிகில் படம் விளையாட்டை மையமாக கொண்ட படமாகவும் ஆக்சன் கலந்த த்ரில்லர் கதையாகவும் இருக்கும் என்பதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். AR ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் மேடையில் பேசிய இயக்குனர் அட்லீ தன்னை கருப்பு என கலாய்த்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். ஆங்கிலம், ஹிந்தி என்பது மொழி மட்டும் தான் அறிவு அல்ல. அது போல கருப்பு என்பது நிறம் மட்டும்தான். என அட்லீ கூறியுள்ளார்.