"வணங்கான் பட போஸ்டரை சூர்யா வீட்டின் அருகில் ஒட்ட வேண்டாம்" என்று சொன்ன இயக்குனர் பாலா.?
வணங்கான் பட போஸ்டரை சூர்யா வீட்டின் அருகில் ஒட்ட வேண்டாம் என்று சொன்ன இயக்குனர் பாலா.?
1999ஆம் ஆண்டு "சேது" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. தொடர்ந்து இவர் நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன், தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
பெரும்பாலும் பாலா இயக்கிய படங்கள் அனைத்தும் அவரை பாதித்த சிறுகதைகள் மற்றும் நேரில் அவர் பார்த்த விஷயங்கள் தான் என்று அவரே பலமுறை கூறியுள்ளார். மேலும் 2008ம் ஆண்டு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதினை பாலா வென்றுள்ளார்.
இந்நிலையில் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடிக்கவிருந்த "வணங்கான்" திரைப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் வி அவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
தற்போது அருண்விஜயை வைத்து எடுக்கப்படும் அந்த படத்திற்கு ஜி.வி,பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டரை சூர்யாவின் வீடு தெருவில் மட்டும் ஒட்டவேண்டாம் என்று பாலா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.