Breaking#: இயக்குநர் பாலாவை தூக்கியெறிந்த 'வர்மா' தயாரிப்பு நிறுவனம்! மீண்டும் படப்பிடிப்பு
Director bala removed from varma team
தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் அர்ஜுன் ரெட்டி என்ற படம் வெளிவந்து மாபெரும் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தமிழில் E4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இயக்குநர் பாலாவின் மூலம் "வர்மா" என்னும் பெயரில் தயாரித்து வந்தது. விக்ரமின் மகன் துருவ் இந்த படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் டீசரும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இய்ககுநர் பாலா எடுத்துள்ள இந்த படம் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறி இந்த படத்தினை வெளியிடப்போவதில்லை என E4 எண்டர்டெய்ன்மென்ட் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த படத்தினை வேறு ஒரு இயக்குநரை வைத்து, துருவ் நடிப்பிலேயே புதிய கலைஞர்களுடன் படமாக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இயக்குநர் பாலாவின் சினிமா வாழ்க்கையில் கிடைத்துள்ள மாபெரும் பின்னடைவாகும்.