×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடனே நிறுத்தவேண்டும்! இல்லைனா.. அமேசான் நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த இயக்குனர் பாரதிராஜா!!

ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 3ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியான

Advertisement

ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 3ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியான வெப் சீரிஸ் 'தி பேமிலி மேன் 2'. இந்தத் தொடரில் சமந்தா இலங்கை தமிழராக நடித்துள்ளார். இந்த வெப்சீரிஸ் ஈழப் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா தி ஃபேமிலி மேன் 2 ஒளிபரப்பை நிறுத்த வேண்டுமென அமேசான் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், எங்கள் இனத்திற்கு எதிரான ‘தி பேமிலி மேன் 2’ இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு, அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத, தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன.  அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த, போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும், தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும், தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். 

இத்தொடரில் தமிழ், முஸ்லீம், வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள். தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bharathiraja #the family man 2
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story