விஜய் தொலைக்காட்சி ஆங்கர் மாகாபாவை அந்த வார்த்தை கூறி திட்டிய கங்கை அமரன்.. என்ன காரணம் தெரியுமா.?
விஜய் தொலைக்காட்சி ஆங்கர் மாகாபாவை அந்த வார்த்தை கூறி திட்டிய கங்கை அமரன்.. என்ன காரணம் தெரியுமா.?
சின்ன திரையில் ரியாலிட்டி ஷோவிற்காக பிரபலமாக இருக்கும் தொலைக்காட்சி விஜய் டிவி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல வருடங்களை தாண்டி வெற்றிகரமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் மகாபா கேட்ட கேள்விக்கு கங்கை அமரன் கடுப்பாகி ஏய் என்று கத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கங்கை அமரன் கலந்து கொண்ட போது நிகழ்ச்சியின் தொகுப்பாளரான மா கா பா தொடர்ந்து கங்கை அமரனை கலாய்த்து வந்தார். மேலும் கங்கை அமரன் இசையமைத்த பாடலை மகாபா கிண்டல் செய்யும் தோணியில் கலாய்த்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் 'வந்தனம் என் வந்தனம்' எனும் கங்கை அமரன் இசையமைத்த பாடல் ஒளிக்கப்பட்டது. இந்தப் பாடலை கேட்ட மகாபா 'வந்தனம் சைதாப்பேட்டை சந்தனம்' எனக் கிண்டல் செய்தார். இதற்கு கங்கை அமரன் நான் நிகழ்ச்சியை விட்டு போகிறேன் என்று கூறினார். இதற்கு மகாபா நீங்கள் போனால் நானும் வருவேன் என்று கூறினார். இதற்கு கங்கை அமரன் கடுப்பாகி ஏய் என்று கத்தினார். இந்த வீடியோவின் புரொமோ விஜய் தொலைக்காட்சியில் வெளியாகி வைரலாகி வருகிறது.