கடன் கழுத்தை நெரிக்குதுண்ணு சொல்லியே அதிக காசு வாங்கும் இயக்குனர்.. தயாரிப்பாளரை லிஸ்ட் போட்டு வாட்டி வதைக்க பிளான்..!!
கடன் கழுத்தை நெரிக்குதுண்ணு சொல்லியே அதிக காசு வாங்கும் இயக்குனர்.. தயாரிப்பாளரை லிஸ்ட் போட்டு வாட்டி வதைக்க பிளான்..!!
தனது இயக்கத்தில் வெளியாகிய சில படங்கள் ஹிட்டடித்ததும் முன்னணி இயக்குனராக அறிமுகமான பிரபல இயக்குனர், அடுத்தடுத்த தோல்வியை சந்தித்ததால் இயக்கத்தில் இருந்து நடிக்கவும் செய்தார்.
தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பணத்தை முதலீடு செய்து சிக்கிக்கொண்ட இயக்குனர், வட்டிக்கடன் வாங்கியதால் அதனை திரும்ப செலுத்த இயலாமல் தவித்துள்ளார்.
கடன் கழுத்தை நெரித்ததால் இயக்குனர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கி, அவரின் பாவனைகளும் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. இதனால் நடிகராக மாறி ஒவ்வொரு படத்திலும் நல்ல வருமானத்தையும் பார்த்துள்ளார்.
படத்தை இயக்கினாலோ, தயாரித்தலோ கிடைக்கும் வருமானத்தை விட அதிக பணம் கிடைக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட இயக்குனர், இயக்கத்தில் இருந்து நடிகராக முழுநேர நடிப்பில் ஈடுபட்டுள்ளார்.
தயாரிப்பாளரிடம் தனக்கு கடன் இருப்பதாக கூடுதல் தொகையை வாங்க ஆரம்பித்த இயக்குனர், தற்போதும் அதையே சொல்லி சொத்துக்களை சேர்த்து வருவதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் எழுகின்றன.
அதேபோல், 50 % சம்பளம் கைக்கு தொகையாக உடனே வேண்டும், வந்து செல்லும் செலவு என தயாரிப்பாளரை வாட்டி வதைப்பதாகவும் கூறப்படுகிறது.