தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இயக்குனர் மணிரத்னத்திற்கு இணைய வழியில் இன்று பாரத் அஷ்மிதா விருது வழங்கல்.!

இயக்குனர் மணிரத்னத்திற்கு இணைய வழியில் இன்று பாரத் அஷ்மிதா விருது வழங்கல்.!

Director maniratnam got new award Advertisement

18 ஆண்டுகளாக எம்ஐடி குழுமம் நாட்டிற்கு முக்கியப் பங்காற்றிய மற்றும் இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்த்த நபர்களை கவுரவிக்கும் விதமாக விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது இயக்குனர் மணிரத்னத்திற்கு  விருது வழங்கவுள்ளது.

தமிழ் சினிமாவில் பகல் நிலவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் இயக்குனர் மணிரத்னம். அதனை தொடர்ந்து மௌன ராகம், நாயகன், தளபதி, ராவணன், ரோஜா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

Bharath aishmitha

இந்நிலையில் புனேவில் அமைந்துள்ள இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனமான எம் ஐ டி உலக அமைதி பல்கலைகழகம் இந்தியாவின் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்கும் நபர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.அந்த வகையில் தற்போது திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை நிகழ்த்தியதற்காக இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு இணைய வழியில் பாரத் அஷ்மிதா விருதினை இன்று வழங்குகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bharath aishmitha #New award #maniratnam
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story