மரண அறிவிப்பு: இயக்குனர் மிஸ்கின் அகால மரணம்... விஜய் ரசிகர்கள் போஸ்டர்; காரணம் என்ன?.. சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சி.!
மரண அறிவிப்பு: இயக்குனர் மிஸ்கின் அகால மரணம்... விஜய் ரசிகர்கள் போஸ்டர்; காரணம் என்ன?.. சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சி.!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர்கள் இளையதளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ், கெளதம் வாசுதேவ் மேனன், மிஸ்க்கின், மன்சூர் அலி கான், ஜியார்ஜ் மரியான், சாண்டி உட்பட பலரும் நடித்து வரும் திரைப்படம் லியோ.
இந்த படம் விரைவில் வெளியாகிறது. அதற்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குனர் மிஸ்கின், தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களில் பேட்டியளிக்க செல்லும்போது, லியோ படத்தின் அப்டேட்டையும் கூறுவார்.
மிஸ்கின் நடிகர் விஜயை விட வயதில் மூத்தவர், அதேபோல இருவருக்குள்ளும் மரியாதை நிமித்தமான பழக்கம் மற்றும் அன்பு உண்டு. அதேபோல, மிஸ்கின் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசுவார். சமீபத்தில் மிஸ்கின் தனியார் நிகழ்ச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதனைத்தொடர்ந்து, லியோ திரைப்படம் குறித்த கேள்விக்கு, தம்பி விஜய் லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டான் என கூறினார். மிஸ்கின் எப்போதும் தம்பி விஜய் என்றே விஜயை குறிப்பிடுவார். அதேபோல, பார்த்துவிட்டான், செய்துவிட்டான் என கூறுவது அவரின் இயல்பு. அவர்களின் நட்புக்கான அடையும் அது.
இந்நிலையில், நடிகர் விஜயை மிஸ்கின் ஒருமையில் பேசிவிட்டதாக கூறி சில விஷமத்தனமான ரசிகர்கள் கொந்தளித்து இருக்கின்றனர். அவர்கள், நடிகர் விஜயை மக்கள் இயக்க பொதுச்செயலர் ஆனந்த் தளபதி என்று அழைக்க கட்டளையிட்டுள்ளார்.
ஆனால், மிஸ்கின் அவரை எப்படி ஒருமையில் பேசலாம்? என வம்பு வளர்த்து, அவர் மரணம் அடைந்துவிட்டதாக போஸ்டர் அடித்து வைரல் செய்து வருகின்றனர். இது பிற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி, இதுதொடர்பான பதிவை இட்டு பின் நீக்கியுள்ளார்.