திடீர் திருமணம் செய்துகொண்ட மூடர் கூடம் இயக்குனர் நவீன்! பெண் யார் தெரியுமா?
Director naveen married sindhu
மூடர் கூடம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பிரபலமானவர் நவீன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது. மூடர் கூடம் படத்தை அடுத்து அலாவுதீனின் அற்புத கேமரா என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்துவருகிறார் நவீன்.
இந்த படத்தில் நவீனுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். லாவுதீனின் அற்புத கேமரா படத்தை அடுத்து நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து ஆக்சன் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கவுள்ளார் நவீன். இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்நிலையில் திடீரென நடிகர் நவீன் சிந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பதிவு திருமணமாக நடைபெற்றுள்ள இவர்களது திருமணம் மிகவும் வித்தியாசமாகவும் நடந்துள்ளது. அதனை நவீன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.